Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மத்தியக் கிழக்கு வட்டாரத்துக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஜப்பானியப் பிரதமர்

ஈரானில் ஏற்பட்டிருக்கும் பதற்றங்களுக்கிடையே. ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே (Shinzo Abe) மத்தியக் கிழக்கு வட்டாரத்துக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். 

வாசிப்புநேரம் -
மத்தியக் கிழக்கு வட்டாரத்துக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஜப்பானியப் பிரதமர்

ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே. ( கோப்புப் படம்: AFP)

ஈரானில் ஏற்பட்டிருக்கும் பதற்றங்களுக்கிடையே. ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே (Shinzo Abe) மத்தியக் கிழக்கு வட்டாரத்துக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

அந்தப் பயணத்தின் முதற்கட்டமாக அவர் சவுதி அரேபியாவுக்குச் செல்லவிருக்கிறார்.

திரு. அபே அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கும் நிலைத்தன்மைக்கும் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல உயரதிகாரிகளைச் சந்திக்கவிருக்கும் அவர் சவுதி அரேபியாவின் அரசரையும், பட்டத்து இளவரசரையும் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

பிரதமர் அபே தமது ஐந்து நாள் பயணத்தின்போது ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கும் ஓமனுக்கும் செல்லவிருக்கிறார்.

அந்த வட்டாரத்தின் கடல்துறை வர்த்தகத்தில் கூடுதலான ஒத்துழைப்புக்கு அவர் வேண்டுகோள் விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்