Images
  • kim abe meet
    (படம்:  AFP/Behrouz Mehri)

ஜப்பானியப் பிரதமருக்கும், வடகொரியத் தலைவர் கிமுக்கும் இடையே சந்திப்பு நடத்த அதிகாரிகள் திட்டம்

ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸொ அபேக்கும், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உனுக்கும் இடையிலான சந்திப்பை நடத்த அதிகாரிகள் திட்டம் கொண்டுள்ளதாக, ஜப்பானிய ஊடகங்கள் தகவல் அளித்துள்ளன.

அதன் தொடர்பில், ஜப்பானியப் பிரதமர், வடகொரியாவுக்கு வரும் ஆகஸ்ட் மாத வாக்கில் பயணம் மேற்கொள்ளலாம் என Yomi-uri நாளிதழ் குறிப்பிட்டது.

அந்தப் பயணம் இடம்பெறுவது சிரமமாக இருந்தால், திரு அபே, ரஷ்யாவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் கிழக்கு வட்டாரப் பொருளியல் கருத்தரங்கிற்கு இடையே, வடகொரிய தலைவரைச் சந்திக்கலாம் என்றும் அந்த நாளிதழ் தகவல் அளித்தது.

உங்கள் கருத்து

Top