Images
ஜப்பானில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை
ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே, இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒகாயாமா வட்டாரத்தைப் பார்வையிட்டார்.
வெள்ளத்தால் இதுவரை 179 பேர் மாண்டனர்.
தற்போது அங்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திரு. அபே தமது வெளிநாட்டுப் பயணத்தை ரத்துச் செய்துவிட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட்டாரங்களைப் பார்வையிட்டுள்ளார்.
பின் அவர் நிவாரண முகாம்களுக்குச் சென்று மக்களின் உடல்நிலை பற்றி விசாரித்து ஆறுதல் கூறினார்.
ஆரம்பகட்ட நிவாரண உதவியாக 4 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதலாகச் சிறப்பு நிதி ஒதுக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

