Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிப்பீன்ஸ் ஐ. எஸ் பயங்கரவாதக் குழுவின் தலைவர் மாண்டது மரபணுச் சோதனையில் உறுதி

பிலிப்பீன்ஸ் ஐ. எஸ் பயங்கரவாதக் குழுவின் தலைவர் அபு டார் மாண்டது மரபணுச் சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

பிலிப்பீன்ஸ் ஐ. எஸ் பயங்கரவாதக் குழுவின் தலைவர் அபு டார் மாண்டது மரபணுச் சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிலிப்பீன்ஸ் தற்காப்பு அமைச்சர் டேல்பின் லோரேன்சானா (Delfin Lorenzana) அந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

கடந்த மாதம் பிலிப்பீன்ஸ் இராணுவம் அபு டாரின் மரணம் குறித்து அறிவித்தது.

இருப்பினும் அபு டாரின் மரணம் குறித்த ஐயம் காரணமாக மரபணுச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஐ. எஸ் பயங்கரவாதக் குழுவோடு தன்னை இணைத்துக்கொண்ட Maute குழுவுக்கு அவர் தலைவராக இருந்தார்.

2017ஆம் ஆண்டில் மராவி நகரில் நீடித்த முற்றுகையைத் திட்டமிடுவதற்கு அபு டார் உதவினார்.

5 மாதங்களுக்கும் மேலாக நீடித்த அந்த முற்றுகையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்