Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வேலை நேரத்துக்குப் பின் குறுந்தகவல்கள் அனுப்புவதைத் தடைசெய்யும் சீன நகரம்

வாழ்க்கையைச் சுலபமாக்கும் செயலி, ஊழியர்களுக்கு வரவர அசௌகரியத்தைக் கொடுக்கிறது. 

வாசிப்புநேரம் -
வேலை நேரத்துக்குப் பின் குறுந்தகவல்கள் அனுப்புவதைத் தடைசெய்யும் சீன நகரம்

(படம்: Reuters)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஷங்ஹாய்: வேலை நேரத்துக்குப் பின் குறுந்தகவல்கள் அனுப்புவதைத் தடைசெய்வது குறித்துப் பரிசீலிக்கிறது சீனாவின் சியாங்ஸோவ் (Xiangzhou) நகரம்.

மற்ற நாடுகள் பயன்படுத்தும் WhatsApp செயலியைப் போன்றது சீனாவில் பயன்படுத்தப்படும் WeChat. குறுந்தகவல் சேவையுடன் அதில் வேறுபல சேவைகளும் அடங்கியுள்ளன.

வாழ்க்கையைச் சுலபமாக்கும் செயலி, ஊழியர்களுக்கு வரவர அசௌகரியத்தைக் கொடுக்கிறது. முதலாளிகள் குறுந்தகவல் செய்தி வழியாக வேலை பற்றிய தகவல்களை அனுப்பிவருகின்றனர்.

ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க அனுப்பப்படும் அத்தகைய குறுந்தகவல்கள் ஊழியர்களுக்குச் சுமையாக இருப்பதாய்க்
கூறப்படுகிறது.

வேலைக்கும் ஓய்வுநேரத்துக்கும் இடையிலான வேறுபாட்டை வகுத்துக்கொள்ளும் நோக்கில் வேலைக்குப் பின் முதலாளிகள் குறுந்தகவல்கள் அனுப்புவதைத் தடைசெய்ய முனைகிறது நகரம்.

அதன் தொடர்பில் தாக்கல் செய்யப்படும் மனு குறித்து WeChat பதிலளிக்கவில்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்