Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென் கொரியாவில் செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்படும் நாய்களுக்கான கழுத்துப்பட்டை

தென் கொரியாவில் செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்படும் நாய்களுக்கான கழுத்துப்பட்டை

வாசிப்புநேரம் -

தென் கொரிய நிறுவனம் ஒன்று செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்படும் நாய்களுக்கான கழுத்துப்பட்டையைக் (collar) கண்டுபிடித்துள்ளது.

நாய்களின் குரைப்பொலி மூலம், அவற்றின் 5 விதமான உணர்ச்சிகளைக் கழுத்துப்பட்டையால் கண்டறிய முடியும்.

குரல் அடையாளத் தொழில்நுட்பத்தைக் கொண்டு, அந்தக் கழுத்துப்பட்டை செயல்படுகிறது.

அது, Petpuls காலர் என்று அழைக்கப்படுகிறது.

அந்த கழுத்துப்பட்டை அணிந்த வளர்ப்பு நாய்களின் உணர்ச்சியை, அவற்றின் உரிமையாளர்கள் திறன்பேசிச் செயலி வாயிலாகத் தெரிந்துகொள்ள முடியும்.

செல்லப் பிராணிகள், மகிழ்ச்சியாக, நிதானமாக, ஆர்வமாக, கோபமாக அல்லது சோகமாக இருக்கின்றனவா என்பதை வேறுபடுத்தி உணரும் ஆற்றல், நவீனக் கழுத்துப்பட்டைக்கு உண்டு.

Petpuls காலர், நாய்களின் உடல் செயல்பாட்டையும் ஓய்வையும் கூட கண்காணிக்கிறது.

"அந்தச் சாதனம், நாய்களின் உணர்ச்சியை மனிதர்கள் புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது" என்று Petpuls ஆய்வகம், ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டது.

அந்தக் கழுத்துப்பட்டை, சராசரியாக 90 விழுக்காட்டுத் துல்லியத்துடன் நாய்களின் உணர்ச்சியைக் கண்டறிவதாக, சோல் தேசியப் பல்கலைக்கழகம் தெரிவித்தது.

அது, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் முதலாவது கழுத்துப்பட்டை என்று அதைத் தயாரிக்கும் நிறுவனம் குறிப்பிட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்