Images
  • air china
    கோப்புப் படம்: Reuters 

ஏர் சைனா விமான ஊழியர்கள் புகைபிடித்ததாகச் சந்தேகம்

ஹாங்காங்கிலிருந்து கிளம்பிய ஏர் சைனா விமானம் அவரசமாகக் கீழே இறங்கியது. மேலே பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென பத்தாயிரம் அடிக்கு இறங்க வேண்டியிருந்தது. விசாரணையில் விமான ஊழியர்கள், விமான அறையில் புகைபிடித்ததாகத் தெரிய வந்துள்ளது.

விமானிகள் தவறேதும் செய்திருந்தால், அதனை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று நிறுவனம் தெரிவித்தது.

10 நிமிடங்களில் போயிங் 737 ரக CA106 விமானம் 25,000 அடி இறங்கியதால் உயிர்வாயுக் கவசங்கள் பயணிகளுக்கு வழங்கப்பட்டன.

விமானம் சீனாவின் டாலியன் நகரில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.


Top