Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

காற்றழுத்தக் குறைவால் அவசரமாகக் கீழே இறங்கிய ஏர் சைனா விமானம்

ஹாங்காங்கிலிருந்து கிளம்பிய ஏர் சைனா விமானம் அவரசமாகக் கீழே இறங்கியது. மேலே பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென பத்தாயிரம் அடிக்கு இறங்க வேண்டியிருந்தது.

வாசிப்புநேரம் -
காற்றழுத்தக் குறைவால் அவசரமாகக் கீழே இறங்கிய ஏர் சைனா விமானம்

சீன சமூக ஊடகத் தளம் Weibo

ஹாங்காங்கிலிருந்து கிளம்பிய ஏர் சைனா விமானம் அவரசமாகக் கீழே இறங்கியது. மேலே பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென பத்தாயிரம் அடிக்கு இறங்க வேண்டியிருந்தது.

35,000 அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்தது. உயிர்வாயுக் கவசங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டன.

பிறகு சிறிது நேரங்கழித்து விமானம் மீண்டும் மேலெழுந்து பயணத்தைத் தொடர்ந்தது. விமானத்தினுள் காற்றின் அழுத்தம் குறைந்ததால் அது கீழே இறங்கவேண்டியிருந்தது.

போயிங் 737 ரக CA106 விமானம் ஹாங்காங்கிலிருந்து சீனாவின் டாலியன் நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

153 பயணிகளும் 9 ஊழியர்களும் விமானத்தில் இருந்தனர். சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் விமானத்திற்கும் எந்தச் சேதமும் இல்லை என்றும் கூறப்பட்டது.

சம்பவம் குறித்து சீன அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். விமானத்தின் தகவல் பதிவுப் பெட்டியும் விமானி அறையின் குரல் பதிவுக் கருவியும் சோதிக்கப்படுகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்