Images
  • Air India (1)
    படம்: AFP/Wu Hong

பயணிகள் உணவில் கரப்பான் பூச்சி - ஏர் இந்தியா மன்னிப்பு

ஏர் இந்தியா விமானத்தில் கடந்தவாரம் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவத்திற்காக ஏர் இந்தியா நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

போபாலில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் பயணிக்குக் கொடுக்கப்பட்ட இட்லி-வடை உணவில் கரப்பான் பூச்சி இருந்தது.

உணவில் கரப்பான் பூச்சி இருந்த படத்தைப் பாதிக்கப்பட்ட பயணி தமது Twitter பக்கத்தில் பகிர்ந்தார்.

சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த ஏர் இந்தியா இதுபோல் மீண்டும் நிகழாமல் இருக்க, தகுந்த ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதன் Twitter பக்கத்தில் தெரிவித்தது.

Top