Images
  • Air India (1)
    (படம்: Twitter)

புறப்படும் வேளையில் சுவரில் மோதிய ஏர் இந்தியா விமானம்


திருச்சியிலிருந்து துபாய் நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானம், ஓடுபாதையிலிருந்து விண்ணுக்குப் பறக்கும் வேளையில் விமான நிலையச் சுவரில் இடித்துச் சேதமடைந்தது.

அதன் காரணமாக அந்த விமானம், மும்பைக்குத் திருப்பிவிடப்பட்டுப் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.


130 பயணிகள், 6 ஊழியர்களைச் சுமந்து சென்றது அந்த ஏர் இந்தியா IX விமானம்.

சம்பவம் குறித்த விசாரணை நிறைவுபெறும்வரை விமானத்தைச் செலுத்திய விமானிகள் விமானம் செலுத்துவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நேற்று (அக்டோபர் 13) காலை திருச்சி விமான நிலையத்திலிருந்து கிளம்பியபோது அந்த Boeing 737 ரக விமானம் சுவரில் உரசி சேதமடைந்திருக்கக் கூடுமென்பதை விமான நிலைய அதிகாரிகள் கவனித்தனர்.

உடனே அந்தத் தகவல் விமானிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு விமானம் திருப்பிவிடப்பட்டது.

சம்பவம் குறித்து ஆகாயப் போக்குவரத்துத்துறை கட்டுப்பாட்டு அமைப்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைப்பின் விசாரணைகளுக்கு ஒத்துழைத்து வருவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.


 

Top