Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கடுமையான கொந்தளிப்பால் கழன்று விழுந்த ஏர் இந்தியா விமானச் சன்னல்

ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், கடுமையான கொந்தளிப்பு காரணமாக நடுவானில் விமானச் சன்னல் கழன்று பதற்றத்தை ஏற்படுத்தியது. 

வாசிப்புநேரம் -
கடுமையான கொந்தளிப்பால் கழன்று விழுந்த ஏர் இந்தியா விமானச் சன்னல்

(படம்: Twitter/Danyal Gilani)

ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், கடுமையான கொந்தளிப்பு காரணமாக நடுவானில் விமானச் சன்னல் கழன்று பதற்றத்தை ஏற்படுத்தியது.

அந்தச் சம்பவத்தில் மூன்று பயணிகள் இலேசாகக் காயமுற்றனர்.

விமானச் சிப்பந்தி, கழன்று விழுந்த சன்னலைச் சீர்செய்ய முயல்வதை, கைத் தொலைபேசிப் படம் காட்டியது.

அப்போது விமானத்தில், மொத்தம் 240 பயணிகள் இருந்தனர்.

அமிர்தசரஸ் நகரிலிருந்து புதுடில்லி நோக்கிச் சென்று கொண்டிருந்தது ஏர் இந்தியா விமானம்.

அரை மணி நேரம் மட்டுமே நீடிக்கும் அந்தப் பயணத்தில், மோசமான வானிலை காரணமாக விமானம் புறப்பட்ட சற்று நேரத்திலேயே^ கொந்தளிப்பு ஏற்பட்டு விமானம் ஆடத் தொடங்கியது.

கொந்தளிப்பு சுமார் 12 நிமிடம் நீடித்ததாகக் கூறப்படுகிறது.

விமானத்தின் உட்புறச் சன்னல் பகுதி மட்டுமே கழன்று விழுந்ததால், விமானப் பயணிகளோ உடைமைகளோ வெளியே உறிஞ்சப்பட்டு வீசப்படும் ஆபத்து நேரவில்லை.

அண்மையில்தான் அமெரிக்கப் பயணிகள் விமானமொன்றின் இயந்திரம் வெடித்துச் சன்னல் உடைந்ததில், பெண் பயணி ஒருவர் கொல்லப்பட்டார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்