Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஏர்ஏஷியா இந்தியா விமானத்தை மிகவும் குளிராக்கியதாக விமானி மேல் புகார்

ஏர்ஏஷியா இந்தியா விமானத்தை மிகவும் குளிராக்கியதாக விமானி மேல் புகார்

வாசிப்புநேரம் -
ஏர்ஏஷியா இந்தியா விமானத்தை மிகவும் குளிராக்கியதாக விமானி மேல் புகார்

(படம்: Reuters)

காலை 9 மணிக்கெல்லாம் புறப்பட வேண்டிய விமானம் பல மணி நேரம் தாமதமடைந்தது.

இந்நிலையில் கொல்கத்தாவிலிருந்து பாக்டொக்ராவிற்குச் செல்லவேண்டிய ஏர்ஏஷியா இந்தியா விமானத்தை விமானி ஆக குறைவாக தட்ப வெப்ப நிலையில் வைத்திருந்தார்.

வெளியே மழை பெய்துகொண்டிருந்ததால் விமானத்தினுள் இருந்த பயணிகள் வெளியே செல்ல மறுத்தனர்.

அவர்களை விமானத்திலிருந்து வெளியேற்றுவதற்காக, விமானத்தின் தட்பவெப்ப நிலையை விமானி மிகவும் குறைத்ததாகக் கூறப்படுகிறது.

அதனால் விமானத்திற்குள் பனிமூட்டம் உருவாகத் தொடங்கியது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பல சிறுவர்களும் பெண்களும் வாந்தி எடுக்கவும் அழவும் ஆரம்பித்தனர்.

இவை தான் விமானப் பயணிகளின் புகார்கள்.

தொழில்நுட்பக் கோளாறுகளால் மொத்தம் நாலரை மணி நேரம்
தாமதம் ஏற்பட்டது. பயணிகளுக்கு ரொட்டியும் ஒரு தண்ணீர் புட்டியும் மட்டுமே வழங்கப்பட்டன.

விமானியின் செயலால் பயணிகளுக்கு பெருமளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்று நிறுவனம் தெரிவித்தது.

சம்பவம் தொடர்பான விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்