Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பணமின்றித் தவிக்கும் AirAsia நிறுவனம் - மீட்டெடுக்க 500 மில்லியன் ரிங்கிட் தேவை

மலிவுக் கட்டண விமான நிறுவனமான AirAsiaவுக்குப் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் அதனை மீட்டெடுக்க சுமார் 500 மில்லியன் ரிங்கிட் தேவை என்றும் நிறுவனத்தின் துணைத்தலைவர் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
பணமின்றித் தவிக்கும் AirAsia நிறுவனம் - மீட்டெடுக்க 500 மில்லியன் ரிங்கிட் தேவை

(கோப்புப் படம்: REUTERS/Lim Huey Teng/GLOBAL BUSINESS WEEK AHEAD)

மலிவுக் கட்டண விமான நிறுவனமான AirAsiaவுக்குப் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் அதனை மீட்டெடுக்க சுமார் 500 மில்லியன் ரிங்கிட் தேவை என்றும் நிறுவனத்தின் துணைத்தலைவர் கூறியுள்ளார்.

The Star நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் அதனைத் தெரிவித்தார்.

மலேசிய நிறுவனமான AirAsia, ஏறத்தாழ 63 பில்லியன் ரிங்கிட் கடனை மறுசீரமைக்கப்போவதாக இம்மாதம் குறிப்பிட்டிருந்தது.

அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கான குத்தகைக் கட்டணங்களும் அந்தத் தொகையில் அடங்கும்.

பங்குதாரர்களின் பணம் 300 மில்லியன் ரிங்கிட், கடனாக ஒரு 200 மில்லியன் ரிங்கிட் ஆகியவை கிடைத்தால், நிறுவனத்தை மீண்டும் நடத்தமுடியும் என்று துணைத்தலைவர் சொன்னார்.

மலேசிய ஏர்லைன்ஸும் நிதிப் பிரச்சினையில் இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளிவந்தன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்