Images
  • air asia
    (படம்: Reuters/Beawiharta)

Malaysia Airports குழுமத்திடம் 479.78 மில்லியன் ரிங்கிட் கோரி வழக்குத் தொடுத்துள்ள AirAsia


மலேசியாவிலுள்ள பெரும்பாலான விமான நிலையங்களை நிர்வாகம் செய்யும் Malaysia Airports குழுமத்திடம் 479.78 மில்லியன் ரிங்கிட் கேட்டு AirAsia விமான நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது.

கோலாலாம்பூரில் உள்ள இரண்டு அனைத்துலக விமான நிலையங்கள் உட்பட மலேசியாவிலுள்ள பெரும்பாலான விமான நிலையங்களை Malaysia Airports குழுமம் முறையாக நிர்வாகம் செய்யவில்லை என்று AirAsia குற்றஞ்சாட்டியுள்ளது.

TheStar அதுபற்றி தெரிவித்துள்ளது.

கோலாலாம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2இல் முறையான நிர்வாகம், செயல்பாடு, சேவை இல்லாததால் தனக்கு ஏற்பட்ட இழப்பு, சேதம் ஆகியவற்றின் தொடர்பில் வழக்குத் தொடுத்துள்ளதாக AirAsia கூறியுள்ளது.


 

Top