Images
  • weibo
    (படம்:  Weibo)

Airbnb வாடகை அறையை அசுத்தமாக விட்டுச்சென்ற சீனப் பயணிகள் மன்னிப்பு கேட்டனர்

வெளிநாட்டில் தங்கியிருந்த Airbnb அறையை அசுத்தமாக விட்டுச் சென்ற மூன்று சீன சுற்றுப்பயணிகள் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.

ஜப்பானில் ஒசாகாவில் விடுமுறைக்குச் சென்றபோது அந்த மூன்று பெண்களும் Airbnb அறையில் தங்கியிருந்தனர்.

ஐந்து நாட்கள் தங்கியபிறகு அவர்கள் புறப்பட்டபோது அறை மிகவும் அசுத்தமாகக் காணப்பட்டது. வீட்டின் அசுத்தமான படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன.

அவற்றைக் கண்டு 19 வயதுடைய மூன்று சுற்றுப்பயணிகளும் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டனர்.

தொடக்கத்தில், தவறுக்காக அம்மூன்று இளையர்களும் வருத்தப்படாததுபோல் காணப்பட்டனர். மக்ககளின் நெருக்கடியால் அவர்கள் பின்னர் மன்னிப்பு கேட்டனர்.

எஞ்சிய உணவுப் பொருட்கள் அறையில் சிதறிக் கிடந்ததாகவும், கெட்டுப்போன உணவின் துர்நாற்றம் வீசியதாகவும் வீட்டின் உரிமையாளர் கூறினார்.

இதுபோன்ற சம்பவம் தனக்கு இதுவரை ஏற்பட்டதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

குப்பையை அகற்றி அறையைச் சுத்தம் செய்ய அவர் சுமார் 3,000 யென் (37 வெள்ளி) செலவு செய்தார்.

கட்டணத்தை இருமடங்காக இளையர்கள் செலுத்தவேண்டும் என அவர் புகார் பதிவுசெய்தார்.

சம்பவம் குறித்த விசாரணையை Airbnb நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
 

Top