Images
  • airport close
    படம்: REUTERS/Issei Kato

ஹாங்காங் விமான நிலையத்தில் விமானச் சேவைகள் ரத்து

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஹாங்காங்கின் அனைத்துலக விமான நிலையத்தில் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அங்கு தொடர்ந்து 3-ஆவது நாளாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.


ஹாங்காங்கை நோக்கி ஏற்கெனவே புறப்பட்டு வந்துகொண்டிருக்கும் விமானங்களையும் சுங்கச்சோதனைகளை முடித்த விமானங்களையும் தவிர அனைத்து விமானப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் கூறினர்.

ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் விமான நிலையத்தினுள் நுழைந்து 'ஹாங்காங்கில் பாதுகாப்பு இல்லை' என்ற வாசகங்களை ஏந்தி ஆர்ப்பரித்ததைத் தொடர்ந்து அந்த முடிவு எடுக்கப்பட்டது.


Top