Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் 50,000 ஊழியர்களைத் தற்காலிகமாக வேலைக்குச் சேர்க்கும் Amazon நிறுவனம்

இந்தியாவில் Amazon நிறுவனம் சுமார் 50,000 ஊழியர்களைத் தற்காலிக வேலைகளில் சேர்த்துக்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியாவில் 50,000 ஊழியர்களைத் தற்காலிகமாக வேலைக்குச் சேர்க்கும் Amazon நிறுவனம்

(படம்: REUTERS/Dado Ruvic/Illustration)

இந்தியாவில் Amazon நிறுவனம் சுமார் 50,000 ஊழியர்களைத் தற்காலிக வேலைகளில் சேர்த்துக்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் அதிக அளவில் பொருள்கள் இணையம் வழி வாங்கப்படுவதால் தேவையை ஈடுகட்ட தற்காலிகமாக ஊழியர்கள் பணியமர்த்தப்படுவதாக Amazon தெரிவித்தது.

COVID-19 கிருமித்தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த சுமார் 2 மாதங்களாக நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதனால் மக்கள் அவர்களுக்குத் தேவையான பல பொருள்களை இணையம் வழி வாங்கத் தொடங்கியுள்ளனர்.

பாதுகாப்பு இடைவெளியை கருத்தில் கொண்டு, ஊழியர்கள் பணிபுரிவர்; ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சிறந்த முறையில் சேவை வழங்கப்படும் என்று Amazon கூறியது.

இதற்கு முன்னர் Amazon நிறுவனம் இந்தியாவில் 2025ஆம் ஆண்டுக்குள் 1 மில்லியன் வேலைகளை உருவாக்கவிருப்பதாகத் தெரிவித்திருந்தது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்