Images
  • Amazon
    (படம்: REUTERS/Abhishek N. Chinnappa)

இந்தியாவில், எதிர்காலப் பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்க இணையக் கல்விக் கழகத்தை அறிமுகப்படுத்தும் Amazon India

இந்தியாவின் போட்டித்தன்மைமிக்க கல்லூரி நுழைவுத் தேர்வுக்குத் தயாராக உதவும் நோக்கில், இணையக் கல்விக் கழகம் ஒன்றை Amazon India நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

கிருமித்தொற்றுக் காலத்தில் இந்தியாவில் இணையவழிக் கற்றல் அதிகரித்துள்ளது.

"Amazon Academy" என அழைக்கப்படும் அந்தக் கற்றல் தளம் இணையப்பக்கமாகவும் Android செயலியாகவும் வழங்கப்படுகிறது.

பாடங்கள், நேரடி விரிவுரைகள், மாதிரித் தேர்வுகள் ஆகியவை அதில் இடம்பெற்றிருக்கும்.

இந்தியாவெங்கும் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இடம்பிடிக்கத் தேவையான கூட்டு நுழைவுத் தேர்வுக்கு (Joint Entrance Examination, JEE) மாணவர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள, புதிய கல்விக் கழகம் உதவியாக இருக்கும்.

Amazon India-இன் கற்றல் தளம் இப்போதைக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

அடுத்த சில மாதங்களுக்கும் அது இலவசமாகக் கிடைக்கும்.  

Top