Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்து: பயணத்துறை இன்னும் மீண்டுவராத வேளையில், இணையத்தில் குறைகூறிய வாடிக்கையாளர் மீது வழக்கு

தாய்லந்தின் பயணத்துறை இன்னும் முழுமையாக மீண்டுவராத வேளையில், உல்லாசத்தலம் ஒன்றைப் பற்றி Tripadvisor இணையப்பக்கத்தில் குறைகூறிய அமெரிக்கர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தாய்லந்து: பயணத்துறை இன்னும் மீண்டுவராத வேளையில், இணையத்தில் குறைகூறிய வாடிக்கையாளர் மீது வழக்கு

(படம்: AFP/Jack Taylor)

தாய்லந்தின் பயணத்துறை இன்னும் முழுமையாக மீண்டுவராத வேளையில், உல்லாசத்தலம் ஒன்றைப் பற்றி Tripadvisor இணையப்பக்கத்தில் குறைகூறிய அமெரிக்கர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

தாய்லந்தில் பணிபுரியும் வீஸ்லி பார்ன்ஸ் (Wesley Barnes) எனும் ஆடவர் Koh Chang தீவில் உள்ள Sea View Resort உல்லாசத்தலத்திற்குச் சென்றிருந்தார்.

அவர், அந்த அனுபவத்தைப் பற்றி Tripadvisor இணையப்பக்கத்தில் பதிவிட்டார்.

உல்லாசத்தலத்தின் ஊழியர்கள் நல்ல சேவையை வழங்கவில்லை என்றும் அவர்கள் வாடிக்கையாளர்களைப் பெற விரும்பாததைப் போன்று செயல்பட்டதாகவும் பார்ன்ஸ் இணையப்பக்கத்தில் குறிப்பிட்டார்.

இருப்பினும் அது நியாயமற்ற கருத்து என்றும் அவர் ஹோட்டலின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளார் என்றும் உல்லாசத்தலத்தின் உரிமையாளர் புகார் அளித்தார்.

பார்ன்ஸ், உல்லாசத்தலத்திற்கு மது கொண்டுவந்ததற்குத் தகுந்த கட்டணத்தைச் செலுத்த மறுத்தார் என்றும் அது குறித்து ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்றும் உரிமையாளர், AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

உல்லாசத்தலத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், பார்ன்ஸுக்கு ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனையும் 200,000 பாட் (6,300 டாலர்) அபராதமும் விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்