Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பெய்ரூட் வெடிப்புக்குப் பின், சென்னை துறைமுகம் அருகே உள்ள 740 டன் Ammonium nitrate மீது கவனம் திரும்பியுள்ளது

பெய்ரூட் துறைமுகத்தில் 6 ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த Ammonium nitrate நேற்று முன்தினம் வெடித்ததில் சுமார் 150 பேர் மாண்டனர்.

வாசிப்புநேரம் -
பெய்ரூட் வெடிப்புக்குப் பின், சென்னை துறைமுகம் அருகே உள்ள 740 டன் Ammonium nitrate மீது கவனம் திரும்பியுள்ளது

(படம்: Pixabay)

பெய்ரூட் துறைமுகத்தில் 6 ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த Ammonium nitrate நேற்று முன்தினம் வெடித்ததில் சுமார் 150 பேர் மாண்டனர்.

5,000க்கும் மேலானோர் காயமடைந்தனர்.

அதை அடுத்து சென்னை துறைமுகம் அருகே வைக்கப்பட்டுள்ள 740 டன் Ammonium nitrate மீது கவனம் திரும்பியுள்ளதாக The Hindu செய்தி நிறுவனம் தெரிவித்தது.

2015ஆம் ஆண்டு அதை இறக்குமதி செய்த நிறுவனத்திடம் அதை வாங்குவதற்கான உரிமம் இல்லாததால், அவை பறிமுதல் செய்யப்பட்டன.

அவை சென்னையிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில், மணலி எனும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அருகில் குடியிருப்பு இடங்கள் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக The Hindu கூறியது.

அவை சோதிக்கப்பட்டதாகவும், பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

கூடிய சீக்கிரம், அவை ஏலக் குத்தகையின் மூலம், உரிமம் உள்ளவருக்கு விற்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தீயணைப்பு, மீட்புச் சேவைகள், அதன் அருகில் 2 தீயணைப்பு வண்டிகளை நிறுத்தத் திட்டமிடுகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்