Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அம்பான் சூறாவளியால் குறைந்தது 84 பேர் மரணம் - நிவாரண முகாம்களில் COVID-19 கிருமி பரவும் அச்சம்

இந்தியாவிலும் பங்களாதேஷிலும் அம்பான் சூறாவளியால் குறைந்தது 84 பேர் மாண்டனர்.

வாசிப்புநேரம் -
அம்பான் சூறாவளியால் குறைந்தது 84 பேர் மரணம் - நிவாரண முகாம்களில் COVID-19 கிருமி பரவும் அச்சம்

AFP / Dibyangshu SARKAR

இந்தியாவிலும் பங்களாதேஷிலும் அம்பான் சூறாவளியால் குறைந்தது 84 பேர் மாண்டனர்.

கொல்கத்தாவில், பெரும்பாலான மக்கள் மின்சாரத் தடையினாலும், தொலைத்தொடர்புத் துண்டிப்பாலும் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.

COVID-19 கிருமித்தொற்றைக் காட்டிலும், சூறாவளி மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பேனர்ஜீ கூறியுள்ளார்.

மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய அம்பான் சூறாவளி, கரையைக் கடந்தது.

கரையோர கிராமங்களில் வசிக்கும் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

சூறாவளியால் அதிகமானோர் மரணமடைவதை இதன்மூலம் தவிர்க்கமுடிந்தாலும், கூட்டம் நிரம்பிவழியும் நிவாரண முகாம்களில் COVID-19 கிருமி மிக எளிதாகப் பரவக்கூடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்