Images
  • aMRITSAR aRCHBISHOP
    (படம்: AFP/Narinder Nanu)

1919 அமிர்தசரஸ் படுகொலைக்கு இங்கிலாந்து தேவாலயத் தலைமைப் பேராயர் மன்னிப்பு

இந்தியாவின் அமிர்தசரஸ் நகரத்தில் 1919இல் நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றதற்கு பிரிட்டன் இதுவரை மன்னிப்புக் கேட்டதில்லை.

ஆனால் இங்கிலாந்து தேவாலயத்தின் தலைமைப் பேராயர் அந்த அசம்பாவிதத்திற்குத் தனிப்பட்ட முறையில் தரையில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

1919 ஏப்ரல் 13 அன்று பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் ஆயுதம் ஏதும் கொண்டிராத நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் ஆகியோரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

பிரிட்டிஷ் ஆவணங்களின்படி 379 பேர் மாண்டனர்.

ஆனால் இந்தியப் புள்ளிவிவரங்கள், அந்தச் சம்பவத்தில் கிட்டத்தட்ட 1,000 பேர் மாண்டனர் என்று கூறுகின்றன.
 

Top