Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: நல்ல பாம்பைக் கொண்டு மனைவியைக் கொலை செய்த ஆடவருக்கு ஆயுள்தண்டனை

இந்தியாவில் நல்ல பாம்பைக் கொண்டு மனைவியைக் கொலை செய்த ஆடவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

இந்தியாவில் நல்ல பாம்பைக் கொண்டு மனைவியைக் கொலை செய்த ஆடவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம், கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள கோலம் நகரில் நடந்தது.

சூரஜ் குமார் என்ற 28 வயது ஆடவர் முதலில், தம்முடைய மனைவியை நச்சுப் பாம்பைக் கொண்டு தாக்கியதாகக் கூறப்பட்டது.

அவரின் மனைவி 25 வயது உத்ரா, சுமார் இரண்டு மாதத்துக்கு மருத்துவமனையில் சிகிச்சைபெறும் நிலை ஏற்பட்டது.

அவர் பின்னர், தம்முடைய பெற்றோர் வீட்டில் குணமடைந்துவந்தபோது, சூரஜ் மீண்டும் தாக்குதல் நடத்த எண்ணியதாகக் கூறப்பட்டது.

தூங்கிக்கொண்டிருந்த உத்ரா மீது நல்ல பாம்பைத் தூக்கி எறிந்தார் சூரஜ்.

நல்ல பாம்பு கடித்ததில், உத்ரா உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

சூரஜ், பின்னர் மனைவியின் சொத்துகளைத் தம்முடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்றதை அடுத்து, உத்ராவின் பெற்றோருக்குச் சந்தேகம் எழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சூரஜ் ஒரு சில மாதங்களாகவே, பாம்பாட்டிகளுடன் தொடர்பில் இருந்ததும், பாம்புகள் தொடர்பிலான காணொளிகளைக் கண்டதும் தெரியவந்தது.

சூரஜின் வீட்டிற்கு அருகில், உத்ராவின் நகைகள் சில புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஊடகங்கள் குறிப்பிட்டன.

- AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்