Images
  • Anne Malar
    (படம்: Anne Malar Yesudass/ Facebook)

தந்தை கொடுத்த இறுதிப்பணத்தாள் மகளிடம் திரும்ப வந்து சேர்ந்தது


மலேசியாவில் 10 ரிங்கிட் நோட்டை இழந்து மனமுடைந்த பெண்ணுக்கு உதவ முன்வந்தனர் இணையவாசிகள்.

காரணம் அது வெறும் 10 ரிங்கிட் நோட்டு அல்ல.

ஆன் மலர் யேசுதாஸிடம் (Anne Malar Yesudass) இறப்பதற்கு முன் தந்தை கொடுத்த கடைசிப் பணத்தாள் அது.

2010 மே 21 அன்று மலரின் தந்தை மகளைப் பள்ளிக்கு அனுப்பிய போது பணத்தாளைச் செலவுக்குக் கொடுத்து அனுப்பினாராம்.

ஆனால் அதுவே தான் தந்தையைப் பார்த்த இறுதிமுறை என்று World of Buzzஇடம் கூறியுள்ளார் மலர்.

கார் விபத்தில் மலரின் தந்தை காலமானார்.

அன்றிலிருந்து அந்த 10 ரிங்கிட் பணத்தாளை எப்போதும் பணப்பையில் வைத்திருந்ததாகக் கூறியுள்ளார் மலர்.


ஆனால் இவ்வாண்டு செப்டம்பரில் பணத்தாள் தன்னிடமிருந்து திருடப்பட்டதாக World of Buzzஇடம் பகிர்ந்தார் மலர்.

சில மாதங்களுக்குப் பின் எதிர்பாரா விதமாக ஹய்ஸா எஸானி (Hyza Ezany) பணத்தாளைப் பெற்றிருக்கிறார்.

நோட்டில் மலர் தந்தையை நினைவுகூர்ந்து அன்புடன் எழுதியிருந்த வார்த்தைகளைப் படித்த அவர் அதனைத் திருப்பித் தர வேண்டும் என்று முடிவுசெய்தார்.


பணத்தாளின் படத்தை Facebookஇல் பகிர்ந்தார்.

24,000 பேரால் மீண்டும் மீண்டும் பகிரப்பட்ட பணத்தாள் இறுதியில் மீண்டும் மலரை அடைந்துள்ளது.

 

Top