Images
  • Victory
    ( படம்: AFP )

போர்ட் டிக்சன் இடைத்தேர்தல்: அன்வார் இப்ராஹிம் அபார வெற்றி

போர்ட் டிக்சன் இடைத்தேர்தலில், பக்கட்டான் ஹரப்பான் கூட்டணியின் வேட்பாளரான திரு. அன்வார் இப்ராஹிம் சுமார் 31,000 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

இரண்டாவது நிலையில் வந்துள்ள பாஸ் கட்சியின் நஸாரி மொக்தாரை விட அவர் கூடுதலாக 23,000க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மூன்றாம் இடத்தை சுயேச்சே வேட்பாளர் ஈஸா சமாட் பெற்றார். அவருக்கு 4,000 வாக்குகள் கிடைத்தன.

மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது போர்ட் டிக்சன் இடைத்தேர்தலில் திரு அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவு வழங்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் திரு. அன்வார் இப்ராஹிம் மலேசியாவின் அடுத்த பிரதமராகப் பதவியேற்கும் வாய்ப்பு அதிகமாகியுள்ளதாக மலேசிய அரசியல் கவனிப்பாளர்கள் கூறினர்.

Top