Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

திரு. அன்வார் தமக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலைத் தரவில்லை: இஸ்தானா நெகாரா

மலேசியாவில் புதிய அரசாங்கத்தை அமைக்கத் தேவையான அளவுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு உள்ளதாகத் திரு. அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) கூறினாலும், அவர் பெயர்ப் பட்டியல் எதனையும் மாமன்னரிடம் ஒப்படைக்கவில்லை என்று இஸ்தானா நெகாரா தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
திரு. அன்வார் தமக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலைத் தரவில்லை: இஸ்தானா நெகாரா

(படம்: REUTERS/Lim Huey Teng/File Photo)

மலேசியாவில் புதிய அரசாங்கத்தை அமைக்கத் தேவையான அளவுக்கு,
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு உள்ளதாகத் திரு. அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) கூறினாலும், அவர் பெயர்ப் பட்டியல் எதனையும் மாமன்னரிடம் ஒப்படைக்கவில்லை என்று இஸ்தானா நெகாரா தெரிவித்துள்ளது.

திரு. அன்வார், மலேசிய மாமன்னர் அப்துல்லா ரியாத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவை (Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah), இன்று சந்தித்தார்.

அப்போது அவர், தமக்கு ஆதரவளிப்பதாகக் கூறும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மட்டுமே மாமன்னரிடம் தெரிவித்தாகக் கூறப்பட்டது.

அதையடுத்துத் திரு. அன்வாரை, மத்திய அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட சட்ட நடைமுறைகளைப் பின்பற்றும்படி மாமன்னர் அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

மாமன்னரைச் சந்தித்தபிறகு நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், தமக்கு ஆதரவு தரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை மாமன்னரிடம் சமர்ப்பித்ததாகத் திரு. அன்வார் கூறியிருந்தார்.

தாம் ஒப்படைத்த ஆவணங்களின்மூலம், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை தமக்கு இருப்பது தெள்ளத் தெளிவாகி இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

மற்ற அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேச்சு நடத்திய பிறகு, மாமன்னர் தமது முடிவை வெளியிடுவார் என்று திரு.அன்வார் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்