Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

புதிய அரசாங்கத்தை அமைக்க எண்ணும் திரு. அன்வாரின் முயற்சி பற்றிய முடிவை மாமன்னரிடம் விட்டுவிடுகிறேன்: மலேசியப் பிரதமர்

மலேசியாவில் புதிய அரசாங்கத்தை அமைக்க எண்ணும் திரு. அன்வார் இப்ராஹிமின் (Anwar Ibrahim) முயற்சி பற்றிய முடிவை, அந்நாட்டு மாமன்னரிடம் விட்டுவிடவிருப்பதாகப் பிரதமர் முஹிதீன் யாசின் (Muhyiddin Yassin) கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
புதிய அரசாங்கத்தை அமைக்க எண்ணும் திரு. அன்வாரின் முயற்சி பற்றிய முடிவை மாமன்னரிடம் விட்டுவிடுகிறேன்: மலேசியப் பிரதமர்

(படம்: Bernama)

மலேசியாவில் புதிய அரசாங்கத்தை அமைக்க எண்ணும் திரு. அன்வார் இப்ராஹிமின் (Anwar Ibrahim) முயற்சி பற்றிய முடிவை, அந்நாட்டு மாமன்னரிடம் விட்டுவிடவிருப்பதாகப் பிரதமர் முஹிதீன் யாசின் (Muhyiddin Yassin) கூறியுள்ளார்.

மாமன்னர் எந்த முடிவை எடுத்தாலும், அது நாட்டின் அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதாகத்தான் இருக்கும். 

என்று திரு. முஹிதீன் சொன்னார்.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் போதிய ஆதரவு தமக்கு உள்ளதாகத் திரு. அன்வார் கூறியிருந்தார்.

அதனையொட்டி அவர் இன்று மலேசிய மாமன்னரைச் சந்தித்தார்.

மாமன்னரைச் சந்தித்தபிறகு நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், தமக்கு ஆதரவு தரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை மாமன்னரிடம் சமர்ப்பித்ததாகத் திரு. அன்வார் கூறியிருந்தார்.

இருப்பினும் அவர் பெயர்ப் பட்டியல் எதனையும் மாமன்னரிடம் ஒப்படைக்கவில்லை என்று இஸ்தானா நெகாரா தெரிவித்தது.

திரு. அன்வார், தமக்கு ஆதரவளிப்பதாகக் கூறும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மட்டுமே மாமன்னரிடம் தெரிவித்தாகக் கூறப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்