Images
  • Anawrph
    ( படம்: AFP )

தாம் மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் திரும்புவது மக்களுக்குப் பயனளிக்கும்: அன்வார் இப்ராஹிம்

மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் திரு. அன்வார் இப்ராஹிம், தாம் மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் திரும்புவது மக்களுக்குப் பயனளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மே மாதம் நடத்தப்பட்ட பொதுத் தேர்தலுக்குப் பிறகு அவர், மக்களின் சோர்வைப் போக்கும் பணிகளில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறார்.

அடுத்த மாதம் நடத்தப்படவுள்ள இடைத் தேர்தலில் திரு. அன்வார் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் Port Dickson தொகுதிக்கான இடைத் தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

திரு. அன்வார், அங்கு போட்டியிடுவதற்கு ஏதுவாக, அவருடைய கட்சியின் சகா, இரண்டு நாட்களுக்கு முன்னர் தம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார்.

அதன் மூலம் திரு. அன்வார் அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட வாய்ப்புக் கனிந்துள்ளது.
இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதே தம்முடைய முதன்மையான இலக்கு.

அதன் மூலம் நாடாளுமன்றத்துக்குச் சென்று அதன் சீரமைப்புக்குப் பங்காற்றப் போவதாகத் திரு. அன்வார் கூறினார். 

Top