Images
  • mr.anwar
    படம்: AFP/Mohd Rasfan

மலேசியாவின் அடுத்த பிரதமர் ஆவதில் அவசரம் இல்லை - திரு. அன்வார் இப்ராஹிம்

மலேசியாவின் கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், தாம் பிரதமர் ஆவதில் அவசரம் ஏதுமில்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மலேசியாவிற்கு இப்போது வலுவான தலைவரால் வழங்கப்படும் நிலைத்தன்மை தேவை என்று அவர் கூறினார். 

மலேசியப் பிரதமர் மகாதீர் முகமதுவுக்குத் தமது ஆதரவு இருக்கும் என்றும் டாக்டர் மகாதீர் தமது பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற 2 நாள் மாநாட்டில் திரு. அன்வார் அதனைத் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, திரு. அன்வார் சிங்கப்பூருக்கு மேற்கொண்டிருக்கும் முதல் பயணம் இது.


Top