Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாலியல் காணொளி சர்ச்சை: காவல்துறை அதிகாரிகள் அவர்களின் கடமையைச் செய்யவிடுங்கள்- அன்வார்

மலேசியாவில் பாலியல் காணொளி தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்த  விசாரணையைக் காவல்துறையிடம் விட்டுவிட வேண்டும் என்று கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
பாலியல் காணொளி சர்ச்சை: காவல்துறை அதிகாரிகள் அவர்களின் கடமையைச் செய்யவிடுங்கள்- அன்வார்

(படம்: Reuters/Edgar Su)

மலேசியாவில் பாலியல் காணொளி தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்த  விசாரணையைக் காவல்துறையிடம் விட்டுவிட வேண்டும் என்று கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியிருக்கிறார்.

மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக,தொழில் சபையின்  நிகழ்ச்சிக்கு இடையே திரு. அன்வார் அவ்வாறு கூறினார்.

காணொளி தொடர்பாக மேலும் ஊகங்களை எழுப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அந்தக் காணொளியில் இருப்பது தாமே என்று ஹாஸிக் அஸிஸ் (Haziq Aziz) என்பவர் கூறியிருந்தார்.

தன்னுடன் பாலுறவில் ஈடுபட்டது மலேசியப் பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி (Azmin Ali) என்றும் அவர் சொன்னார்.

ஆனால் திரு. அஸ்மின் அலி அதனை மறுத்தார்.

அதன் பிறகு ஹாஸிக் அஸிஸ் (Haziq Aziz) கைது செய்யப்பட்டு பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

காணொளியின் நம்பகத்தன்மை ஆராயப்பட்டு வருவதாகவும், விசாரணை தொடர்வதாகவும் திரு. அன்வார் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்