Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'என் பொறுமைக்கும் எல்லை உண்டு': அன்வார் இப்ராஹிம்

மலேசியாவின் கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தாம் பெரும்பாலான நேரங்களில் பொறுமையைக் கடைப்பிடித்தபோதும் தமது கட்சி பலவீனமானது என்று குறைகூறப்படுவதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பொறுமைசாலி அல்ல என்று கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

மலேசியாவின் கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தாம் பெரும்பாலான நேரங்களில் பொறுமையைக் கடைப்பிடித்தபோதும் தமது கட்சி பலவீனமானது என்று குறைகூறப்படுவதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பொறுமைசாலி அல்ல என்று கூறியுள்ளார். தமது கட்சியைப் பலப்படுத்துவது தமது கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொருவரும் அவரவரின் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு உரிமை பெற்றிருப்பினும் தமது கட்சி பிளவுபட்டுள்ளது என்றும் பலவீனமாய் உள்ளது என்றும் கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். நேற்று பேராக்கில் கெஅடிலான் கட்சியின் மாநாட்டில் அவர் பேசினார்.

போர்ட் டிக்சன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. அன்வார், பிரதமர் மகாதீர் முகமதுவுக்கான தமது ஆதரவை மறுஉறுதிப்படுத்தினார். பிரதமரின் பொறுப்புகள் எளிதானவை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த வியாழக்கிழமை பிரதமரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்ததாகவும் அவருடன் நீண்ட நேரம் உரையாடியதாகவும் திரு. அன்வார் கூறினார். அப்போது அவரின் தலைத்துவத்திற்கு தம் முழு ஆதரவைத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்