Images
  • anwar
    திரு. அன்வார் இப்ராஹிம். படம்: REUTERS/Willy Kurniawan

'நல்லுறவு, பணத்தைக் கொண்டு முடிவுசெய்யப்படுவது அல்ல ' : திரு. அன்வார்

சிங்கப்பூர், மலேசியாவுடனான உறவை வர்த்தகக் கண்ணோட்டத்தோடு மட்டுமே பார்க்கக் கூடாது என்று திரு. அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் அனைத்துலகக் கொள்கை ஆய்வு நிலைய ஆய்வாளர் திரு.யாங் ரஸாலி காசிமுக்குப் பேட்டியளித்தபோது அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

பணம், விதிமுறைகள், உத்தரவுகள் போன்றவற்றை மட்டுமே கொண்டு உறவுகள் வலுப்படாது என்று திரு.அன்வார் கூறினார்.

நீண்ட காலமாக இருதரப்பையும் அணுக்கமாக வைத்திருக்கும் அம்சங்களையும், நடப்பு நிலவரத்தையும் சிங்கப்பூர் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.

மலேசியாவின் 14ஆவது பொதுத் தேர்தல் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் பல்கலையின் இணையத்தளத்தில் காணொளித் தொடர்கள் வெளியிடப்படுகின்றன.

அவற்றுள் ஒன்று திரு.அன்வாரின் நேர்காணல்.

தற்போதைய மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது இன்னும் ஈராண்டில் பதவி விலகுவார் என்றும் அந்தப் பொறுப்பு திரு. அன்வாருக்குக் கொடுக்கப்படும் என்றும் பரவலாகச் சொல்லப்படுகிறது.

தாம் பிரதமரான பிறகு இரு தரப்பு உறவுகள் மேம்படும் என்றும் திரு.அன்வார் கூறினார்.
 

Top