Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அவசரநிலையை நீட்டிக்கவேண்டாம்- மலேசிய மன்னரிடம் அன்வார் வேண்டுகோள்

மலேசியாவில் நடப்பில் உள்ள அவசரநிலையை நீட்டிக்கவேண்டாமென மாமன்னரிடம் கேட்டுக்கொண்டதாக, எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

மலேசியாவில் நடப்பில் உள்ள அவசரநிலையை நீட்டிக்கவேண்டாமென மாமன்னரிடம் கேட்டுக்கொண்டதாக, எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) கூறியுள்ளார்.

அவர் இன்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷாவை (Sultan Abdullah Sultan Ahmad Shah) அரச மாளிகையில் சந்தித்தார்.

அந்தச் சந்திப்பில் அரசாங்க மாற்றம் பற்றி ஏதும் பேசப்படவில்லை என்று திரு. அன்வார் குறிப்பிட்டார்.

மலேசிய அரசாங்கம் நோய்த்தொற்றைக் கையாளும் விதம் குறித்து அதிருப்தி அதிகரித்துவரும் வேளையில் மலேசிய மாமன்னர், அரசியல் தலைவர்களைச் சந்தித்துள்ளார்.

அடுத்த இரு நாள்களில் இன்னும் சில தலைவர்களை அவர் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்