Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தடுப்பூசிகளை நேரடியாகப் பெறுவதை மலேசிய மத்திய அரசாங்கம் தடுக்கிறது: குறைகூறும் அன்வார்

மலேசியாவின் மாநில அரசாங்கங்களும் தனியார் துறை நிறுவனங்களும் COVID-19 தடுப்பூசிகளை நேரடியாகப் பெறுவதை, மத்திய அரசாங்கம் தடுத்து வருவதாக, எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

வாசிப்புநேரம் -

தேசிய மருந்தாக்க ஒழுங்குமுறை அமைப்பு அங்கீகரித்த தடுப்பூசிகளைச் சொந்தமாகப் பெற, சில மாநில அரசுகள், தனியார் வர்த்தகங்கள், அறநிறுவனங்கள் ஆகியவை முயன்றுவருவதாகத் திரு. அன்வார் விடுத்த அறிக்கை குறிப்பிட்டது.

இருப்பினும், அதற்குப் பொறுப்பான மத்திய அரசாங்க அமைச்சர்களால், அந்த முயற்சி தாமதம் அடைவதாகவும் தடுக்கப்படுவதாகவும் அறிக்கை தெரிவித்தது.

அந்தத் தாமதத்தால், கடுமையான பின்விளைவுகள் நேர்ந்து வருவதாகத் திரு. அன்வார் கூறினார்.

தடுப்பூசிகளைப் பெறத் தாங்கள் மேற்கொண்ட முயற்சி, மத்திய அரசாங்கத்தால் ஒட்டுமொத்தமாய்ப் புறக்கணிக்கப்பட்டதாக, தனியார் வர்த்தகங்களும் அற நிறுவனங்களும் தம்மிடம் தெரிவித்ததாக அவர் சொன்னார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்