Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'பொருளியல்கள் மீட்சியடைவதற்குத் தடையற்ற, நியாயமான, பாகுபாடற்ற வர்த்தக நடைமுறைகள் அவசியம்'

ஆசிய பசிஃபிக் நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள், நோய்ப்பரவலின் தாக்கத்திலிருந்து பொருளியல்கள் மீட்சியடைவதற்குத் தடையற்ற, நியாயமான, பாகுபாடற்ற வர்த்தக நடைமுறைகள் அவசியம் எனத் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
'பொருளியல்கள் மீட்சியடைவதற்குத் தடையற்ற, நியாயமான, பாகுபாடற்ற வர்த்தக நடைமுறைகள் அவசியம்'

(படம்: AFP)

ஆசிய பசிஃபிக் நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள், நோய்ப்பரவலின் தாக்கத்திலிருந்து பொருளியல்கள் மீட்சியடைவதற்குத் தடையற்ற, நியாயமான, பாகுபாடற்ற வர்த்தக நடைமுறைகள் அவசியம் எனத் தெரிவித்துள்ளனர்.

வரும் வெள்ளிக்கிழமை, முதல் முறையாக APEC மாநாடு இணையம் வழி நடைபெறுவதற்கு முன் தொடர் பேச்சுகளை அமைச்சர்கள் தொடங்கியுள்ளனர்.

இவ்வாண்டுக்கான மாநாட்டை மலேசியா வழிநடத்துகிறது.

COVID-19 சூழலால் ஏற்பட்டுள்ள பொருளியல் பாதிப்புகளைச் சமாளிக்கும் நடவடிக்கைகளில் APEC நாடுகள் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கான ஒன்றிணைந்த முயற்சிகளில் ஒன்றாக, தலைவர்கள் பிரகடனம் வெளியிடப்படலாம்.

APEC உறுப்பு நாடுகளின் கருத்துகள், பொருளியல் மீட்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய அவற்றின் ஆற்றல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு வெளியிடப்படும் ஒருமித்த அறிக்கையே, தலைவர்கள் பிரகடனம் என அழைக்கப்படுகிறது.

கடைசியாக, 2018ஆம் ஆண்டில் அத்தகைய பிரகடனத்தை APEC தலைவர்கள் வெளியிட்டனர்.

இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில், APEC வட்டாரப் பொருளியல் வளர்ச்சி 3 புள்ளி 7 விழுக்காடு குறைந்தது.

வட்டாரப் பொருளியல் 2.5 விழுக்காடு சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் ஏற்படும் சுமார் 1.8 டிரில்லியன் டாலர் இழப்பினால், APEC வட்டாரத்தின் பொருளியல் வளர்ச்சி கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாகச் சுருங்கக்கூடும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்