Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அப்பளம் சாப்பிட்டால் கொரோனா கிருமி தொற்றாது என்று கூறிய இந்திய மத்திய அமைச்சருக்குக் கிருமித்தொற்று

அப்பளம் சாப்பிடுவதன் மூலம் COVID-19 நோயிலிருந்து தப்பலாம் என்று கூறிய இந்திய மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலுக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
அப்பளம் சாப்பிட்டால் கொரோனா கிருமி தொற்றாது என்று கூறிய இந்திய மத்திய அமைச்சருக்குக் கிருமித்தொற்று

(படம்: AFP)

அப்பளம் சாப்பிடுவதன் மூலம் COVID-19 நோயிலிருந்து தப்பலாம் என்று கூறிய இந்திய மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலுக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திரு. மெக்வால் கிருமித்தொற்று இருப்பதை நேற்று உறுதிப்படுத்தினார். அவர் டில்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

தொழில்துறை, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் திரு. மெக்வால் தமது உடல்நிலை சீராக இருப்பதாய்க் கூறியுள்ளார்.

திரு. மெக்வால், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மசாலா அப்பளங்களைச் சாப்பிட்டுவந்தால், கொரோனா கிருமித்தொற்றிலிருந்து தப்பலாம் என்று கூறியிருந்தார்.

அந்த வகை அப்பளங்கள் உடலில் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

சென்ற மாத இறுதியில் வெளியான அந்தக் காணொளி, இந்திய சமூக ஊடகங்களில் வெகுவாகப் பரவி கேலிக்கு உள்ளானது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்