Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

Apple நிறுவனம் தொடங்கவுள்ள தூய்மையான எரிபொருளுக்கான 300 மில்லியன் டாலர் நிதி

Apple நிறுவனம் தூய்மையான எரிபொருளுக்கான 300 மில்லியன் டாலர் நிதி ஒன்றைச் சீனாவில் தொடங்கவுள்ளது.

வாசிப்புநேரம் -
Apple நிறுவனம் தொடங்கவுள்ள தூய்மையான எரிபொருளுக்கான 300 மில்லியன் டாலர் நிதி

(படம்: REUTERS/Regis Duvignau/File Photo)

Apple நிறுவனம் தூய்மையான எரிபொருளுக்கான 300 மில்லியன் டாலர் நிதி ஒன்றைச் சீனாவில் தொடங்கவுள்ளது.

சுமார் ஒரு மில்லியன் வீடுகளுக்கு மின்சக்தி அளிக்கும் அளவு மறுபயனீட்டு எரிசக்தித் திட்டங்களில் முதலீடு செய்யவுள்ளதாக இன்று (ஜூலை 13) அந்நிறுவனம் தெரிவித்தது.

தூய்மைக்கேட்டைக் குறைப்பதில் சீன அரசாங்கம் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது.

நான்காண்டு காலத்தில் Apple நிறுவனத்துடன் மேலும் 10 நிறுவனங்கள் இவ்வாறு சீனாவில் முதலீடு செய்யவுள்ளன.

அமெரிக்காவும் சீனாவும் வர்த்தகப் போரில் ஈடுபட்டு வரும் வேளையில் இந்த முதலீடுகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

பதற்றங்களைத் தவிர்க்கும்படி இவ்வாண்டின் முற்பகுதியில் Apple நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்