Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் Apple நிறுவனத்தின் முதல் கடை - அடுத்த ஆண்டு திறக்கப்படும்

இந்தியாவில் அடுத்த ஆண்டு Apple நிறுவனத்தின் முதல் கடை திறக்கப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
இந்தியாவில் Apple நிறுவனத்தின் முதல் கடை - அடுத்த ஆண்டு திறக்கப்படும்

(படம்: REUTERS/Regis Duvignau/File Photo)

இந்தியாவில் அடுத்த ஆண்டு Apple நிறுவனத்தின் முதல் கடை திறக்கப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டில் இணையத்தில் விற்பனையைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

உள்ளூர்ப் பங்காளி இல்லாமல் கடையைத் திறக்க சிறப்பு ஒப்புதலை Apple நிறுவனம் இந்திய அரசாங்கத்திடம் கோரியது.

திறன்பேசிகளுக்கான இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா திகழ்கிறது.

2018ஆம் ஆண்டு, இந்தியா சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்தது. வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் கடைகளை நேரடியாக இந்தியாவில் திறப்பதற்கு அந்தச் சட்டத் திருத்தம் தடையாக உள்ளது.

"உள்ளூர்ப் பங்காளியுடன் செயலாற்றினால் அது சரியாக வராது. தங்களுக்குத் தனிப்பட்ட வழிமுறைகள் உள்ளன" என திரு. குக் தெரிவித்தார்.

தற்போது இந்தியாவில் மூன்றாம் தரப்பின் மூலமாக Apple நிறுவனம் தனது தயாரிப்புகளை விற்று வருகிறது. Samsung, Huawei ஆகிய நிறுவனங்களைவிட அதன் விற்பனை குறைவாகவே உள்ளது.

சீனாவில் Apple நிறுவனத்தின் விற்பனையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதனைச் சரிக்கட்ட இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளது Apple நிறுவனம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்