Images
  • Apple Wuhan Ready
    (படம்: CNA)

பெய்ச்சிங்கில் ஆப்பிள் நிறுவனம் சில கடைகளை மீண்டும் திறக்கவிருக்கிறது

ஆப்பிள் நிறுவனம் சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் அதன் கடைகள் சிலவற்றை மீண்டும் திறக்கவிருப்பதாக அதன் இணையத்தளம் தெரிவித்தது.

செயல்படும் நேரத்தைக் குறைத்து, அது கடைகளை இன்று முதல் திறக்கும் என்று கூறப்பட்டது.

COVID-19 கொரோனா கிருமிப் பரவலை அடுத்து, சீனாவில் உள்ள தமது கடைகளை ஆப்பிள் நிறுவனம் மூடியது.

இந்த மாதத் தொடக்கம் முதல் அவை அனைத்தும் மூடப்பட்டன.

தற்போது பெய்ச்சிங்கில் மட்டுமே அவற்றைத் திறக்கவிருப்பதாகவும், சீனாவின் மற்ற இடங்களில் அது தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் நிறுவனம் அதன் இணையத்தளத்தில் குறிப்பிட்டது.
 

Top