Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் கிருமிப்பரவலுக்கு எதிராகப் போராடக் களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவ அதிகாரிகள்

இந்தியா: கிருமிப்பரவலுக்கு எதிராக போராட களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவ அதிகாரிகள்

வாசிப்புநேரம் -
இந்தியாவில் கிருமிப்பரவலுக்கு எதிராகப் போராடக் களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவ அதிகாரிகள்

(படம்:Reuters/Danish Siddiqui)

இந்தியா, கொரோனா கிருமிப்பரவலுக்கு எதிரான போராட்டத்தில் கைகொடுக்க, முன்னாள் ராணுவ மருத்துவ அதிகாரிகள் சுமார் 400 பேரைப் பணியமர்த்தி வருகிறது.

அவர்கள் அதிகபட்சம் 11 மாதத்துக்குச் சேவையாற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் நோய்ப்பரவல் கட்டுக்கடங்காது பரவும் நிலையிலும், நாடளாவிய முடக்கநிலையை அறிவிக்க, பிரதமர் நரேந்திர மோடி மறுத்து வருகிறார்.

அதன் தொடர்பில் அவருக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.

தற்போது இந்தியாவில், சுமார் மூன்றரை மில்லியன் பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒரு மில்லியன் பேருக்கு உயிர்வாயு சிகிச்சை தேவைப்படுகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்