Images
  • Empty Causeway
    (படம்: Try Sutrisno Foo/ CNA)

மலேசியாவிற்குள் நுழையும் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவதற்கான ஹோட்டல் செலவை ஏற்க வேண்டும்

மலேசியாவிற்குப் பயணம் மேற்கொள்ளும் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவதற்கான ஹோட்டல் செலவை ஏற்க வேண்டும் என்று அந்நாட்டின் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டினரும் மலேசிய நிரந்தரவாசிகளும் நாள் ஒன்றுக்கு முழுக் கட்டணமாக சுமார் 48 வெள்ளியைச் செலுத்த வேண்டும்.

அதன்படி, 14 நாள் கட்டாயத் தனிமைப்படுத்தும் நடைமுறையை முடிக்க, ஒருவருக்குச் சுமார் 680 வெள்ளி செலவாகும்.

தாய்நாடு திரும்பும் மலேசியர்கள் அதில் பாதி கட்டணத்தைச் செலுத்தினால் போதும்.

மலேசியாவிற்குப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர், அவர்களுக்கு அருகில் இருக்கும் மலேசியத் தூதரகத்திற்கு முதலில் செல்ல வேண்டும். அங்கு தொகையைச் செலுத்துவதற்கான ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்திட வேண்டும்.

பின்னர் தூதகரம் அனுமதிக் கடிதத்தைப் பயணிக்கு வழங்கும். மலேசியாவிற்குள் நுழையும் முன்னர் பயணிகள் அனைவரிடமும் அந்த அனுமதிக் கடிதம் இருப்பதை விமான நிறுவனங்கள் உறுதிசெய்யும் என்று திரு. இஸ்மாயில் கூறினார்.

உடற்குறையுள்ள மலேசியர்களிடமிருந்து எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் திரு. இஸ்மாயில் குறிப்பிட்டார்.  

Top