Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஆசியான் தலைவர்களின் உச்சநிலை சந்திப்பில் மியன்மார் விவகாரம் முக்கிய இடம் வகிக்கும்

ஆசியான் தலைவர்கள் இன்று நடத்தும் உச்சநிலை சந்திப்பில் மியன்மார் நெருக்கடி பற்றி முதன்மையாகக் கலந்துபேசப்படுமென கூறப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஆசியான் தலைவர்களின் உச்சநிலை சந்திப்பில் மியன்மார் விவகாரம் முக்கிய இடம் வகிக்கும்

(கோப்புப் படம்: AFP/Romeo Gacad)

ஆசியான் தலைவர்கள் இன்று நடத்தும் உச்சநிலை சந்திப்பில் மியன்மார் நெருக்கடி பற்றி முதன்மையாகக் கலந்துபேசப்படுமென கூறப்பட்டுள்ளது.

மியன்மாரின் தற்போதைய நிலை குறித்து, ஆசியான் தலைவர்கள் அக்கறை தெரிவித்துள்ளனர்.

ஆசியானின் சிறப்புத் தூதர் மியன்மாருக்குச் செல்லவும், அங்குள்ள அனைத்துத் தரப்பினருடனும் கலந்துபேசவும் அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

மியன்மாரின் தற்போதைய நெருக்கடியைத் தீர்க்க எந்த உறுதியும் வழங்காததால் ஆசியான் சந்திப்பில் பங்கேற்க ராணுவத் தலைவர்மின் ஆங் லைனுக்கு (Min Aung Hlaing) அழைப்பு விடப்படவில்லை.

மியன்மாரின் மூத்த அரசதந்திரி சான் ஆயே (Chan Aye), அரசியல் சாரா பிரதிநிதியாகக் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் பங்கேற்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்