Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஆசியான் - சீனா இணையச் சந்திப்பில் மியன்மார் பிரதிநிதி யாரும் கலந்து கொள்ளவில்லை

ஆசியான் - சீனா இணையச் சந்திப்பில் மியன்மார் பிரதிநிதி யாரும் கலந்து கொள்ளவில்லை

வாசிப்புநேரம் -

ஆசியான் - சீனா இணையச் சந்திப்பில் மியன்மார் பிரதிநிதி யாரும் கலந்து கொள்ளவில்லை என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லா (Saifuddin Abdullah) தெரிவித்திருக்கிறார்.

சந்திப்பில் பெய்ச்சிங்கிற்கான மியன்மார் தூதர் கலந்துகொள்வார் என்று மியன்மார் தவிர்த்த மற்ற ஆசியான் நாடுகள் நேற்று சீனாவுடன் இணக்கம் கண்டதாக அவர் கூறினார்.

ஆனால் மியன்மார் தூதர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

அது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் உடனடியாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.

மியன்மார் ராணுவ ஆட்சித் தலைவர் மின் ஆங் லைனை இணைய உச்சநிலைச் சந்திப்புகளில் இருந்து ஆசியான் கடந்த மாதம் விலக்கிவைத்தது.

ஆசியானுடன் ஒப்புக்கொள்ளப்பட்ட அமைதித் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அவர் முன்னேற்றம் காணத் தவறியதே அதற்குக் காரணம்.

கீழ்நிலைப் பிரதிநிதிகளைக் கூட்டங்களுக்கு அனுப்பிவைக்க மியன்மார் மறுப்புத் தெரிவித்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்