Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ரொஹிஞ்சா நெருக்கடிக்குத் தீர்வுகாண ஆசியான் நாடுகள் கூட்டு முயற்சி

ரொஹிஞ்சா நெருக்கடிக்குத் தீர்வுகாண உதவும் முயற்சியில் ஆசியான் நாடுகள் இணைந்து பணியாற்றுவதாகத் தாய்லந்து வெளியுறவு அமைச்சர் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
ரொஹிஞ்சா நெருக்கடிக்குத் தீர்வுகாண ஆசியான் நாடுகள் கூட்டு முயற்சி

கோப்புப்படம்: AFP

ரொஹிஞ்சா நெருக்கடிக்குத் தீர்வுகாண உதவும் முயற்சியில் ஆசியான் நாடுகள் இணைந்து பணியாற்றுவதாகத் தாய்லந்து வெளியுறவு அமைச்சர் கூறியிருக்கிறார்.

தாய்லந்தின் சியாங்மாய் நகரில் நடந்த ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்குப் பிறகு திரு. டொன் பிராமுத்வினாய் (Don Pramudwinai) செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றினார்.

மியன்மாரிடம் சில கருத்துகளையும், பரிந்துரைகளையும் முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டார். மியன்மார் அவற்றைப் பரிசீலிக்கும் என்று திரு. பிராமுத்வினாய் நம்பிக்கை தெரிவித்தார்.

மியன்மாரில் நிலைமை மேம்பட்டவுடன், ரக்கைன் மாநிலத்தில் ஆசியானின் கூட்டு முயற்சிகளை வெளிப்படையாகத் தெரிந்துகொள்ளலாம் என்றார் அவர்.

ரக்கைன் விவகாரம் குறித்து ஆக்ககரமான கலந்துரையாடல் இடம்பெற்றதாகத் தாய்லந்து அமைச்சர் தெரிவித்தார்.

ஆசியான் நாடுகள் அந்த விவகாரம் தொடர்பில் தனிப்பட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளன. இருப்பினும், தாய்லந்து உள்ளிட்ட ஆசியான் நாடுகள் கூட்டாக விவசாயம், பள்ளி மேம்பாடு, அரிசி ஆலை போன்ற திட்டங்களில் ஈடுபட்டுள்ளன என்று திரு. பிராமுத்வினாய் குறிப்பிட்டார்.

தென் சீனக் கடல் நடத்தை விதிகள் தொடர்பில் அடுத்த மாதம் மியன்மாரில் கூட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்