Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

"கிருமிப்பரவல் சூழலை எதிர்கொள்ள நாடுகளிடையே ஒத்துழைப்பு அவசியம்" - ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள்

கிருமிப்பரவலை எதிர்கொள்ள ஆசியான் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு அவசியம் என்று அந்நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
"கிருமிப்பரவல் சூழலை எதிர்கொள்ள நாடுகளிடையே ஒத்துழைப்பு அவசியம்" - ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள்

படம்: Reuters

கிருமிப்பரவலை எதிர்கொள்ள ஆசியான் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு அவசியம் என்று அந்நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கிருமிப்பரவலால் கடுமையான சவால்களையும், இடையூறுகளையும் எதிர்நோக்குவதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இணையம் வழி நடந்த ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், வட்டாரப் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டது.

கொரியத் தீபகற்பத்தில் அணுவாயுதக் களைவு,
தென் சீனக் கடல் விவகாரம், அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான பதற்றம் போன்றவையும் அவற்றில் அடங்கும்.

ஆசியானில் நிலையற்றதன்மை அதிகரித்துவருகிறது;இந்நிலையில், வெளிநாட்டுப் பங்காளிகளுடன் இணைந்து மேற்கொள்ளும் திட்டங்களில், வட்டார நாடுகளுக்கிடையே ஒற்றுமை அவசியம் என்பதை அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்