Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பலதரப்பு வர்த்தக முறைக்குக் கூடுதல் ஆதரவு தேவை: கம்போடியப் பிரதமர்

கம்போடியா பலதரப்பு வர்த்தக முறைக்குக் கூடுதல் ஆதரவு வழங்குமாறு ஆசிய, ஐரோப்பிய நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -

கம்போடியா பலதரப்பு வர்த்தக முறைக்குக் கூடுதல் ஆதரவு வழங்குமாறு ஆசிய, ஐரோப்பிய நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்விரு வட்டாரங்களுக்கும் இடையே வர்த்தக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது நோக்கம்.

ASEM எனும் ஆசிய-ஐரோப்பியக் கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கம்போடியப் பிரதமர் ஹுன் சென் (Hun Sen) அதற்கு அழைப்பு விடுத்தார்.

எதிர்காலத்தில் நோய்ப்பரவல் தணியும்போது புதிய அனைத்துலகப் போக்குகளுக்கேற்ப வர்த்தகம், முதலீடு ஆகியவை இயல்புநிலையில் இயங்குவதை ஊக்குவிக்கவேண்டும் என்றார் கம்போடியப் பிரதமர்.

அது ஆசிய, ஐரோப்பிய வட்டாரங்கள் முக்கியமாக உடனடியாகக் கவனம் செலுத்தவேண்டிய பணி என்றும் அவர் சொன்னார்.

இணையம்வழி நடைபெறும் 2-நாள் உச்சநிலை மாநாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் கலந்துகொள்கின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்