Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வளரும் ஆசிய நாடுகளில் 60 ஆண்டுகளில் முதல் முறையாக சுருங்கும் பொருளியல்

ஆசியாவில் வளர்ந்து வரும் வட்டாரத்தின் பொருளியல்கள், 60 ஆண்டுகளில் முதல் முறையாக சுருங்கவுள்ளதாய் ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
வளரும் ஆசிய நாடுகளில் 60 ஆண்டுகளில் முதல் முறையாக சுருங்கும் பொருளியல்

கோப்புப்படம்: Reuters

ஆசியாவில் வளர்ந்து வரும் வட்டாரத்தின் பொருளியல்கள், 60 ஆண்டுகளில் முதல் முறையாக சுருங்கவுள்ளதாய் ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது.

இவ்வாண்டில் மட்டும், அந்தப் வட்டாரங்களின் மொத்தப் பொருளியல் 0.7 விழுக்காடு சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஆசிய மேம்பாட்டு வங்கி வெளியிட்ட 0.1 விழுக்காடு முன்னுரைப்பைக் காட்டிலும் அது அதிகம்.

COVID-19 நோய்ப்பரவல் நீடிப்பதால், விநியோகத் துறை இன்னும் கூடுதல் பாதிப்பை எதிர்நோக்கக்கூடும்.

வியட்நாம், மியன்மார் ஆகியவற்றைத் தவிர, மற்ற தென்கிழக்காசியப் பொருளியல்கள் மோசமாகச் சுருங்கியுள்ளன.

எனினும், சீனா போன்ற சில பொருளியல்கள் தொடர்ந்து வளர்ச்சிக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டில் சீனா, 1.8 விழுக்காடு கூடுதல் வளர்ச்சிக் காணக்கூடும்.

அடுத்த ஆண்டு முழுமைக்கும், சீனாவின் பொருளியல் வளர்ச்சி 7.7 விழுக்காடாக இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்