Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஆள் கடத்தல்களைத் தடுக்க Grab ஓட்டுநர்களுக்குப் பயிற்சி

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய வாடகைக் கார்ச் சேவை நிறுவனமான Grab, ஆள் கடத்தலைத் தடுக்க அதன் ஓட்டுநர்களுக்கு பயிற்சி கொடுக்கவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
ஆள் கடத்தல்களைத் தடுக்க Grab ஓட்டுநர்களுக்குப் பயிற்சி

கோப்புப் படம்: Reuters

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய வாடகைக் கார்ச் சேவை நிறுவனமான Grab, ஆள் கடத்தலைத் தடுக்க அதன் ஓட்டுநர்களுக்கு பயிற்சி கொடுக்கவிருக்கிறது.

ஆள் கடத்தல் சம்பவங்களைத் தடுப்பதில், விமான நிலையம், ஹோட்டல், போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் முன்னணிப் பங்காற்ற முடியும்.

அந்த இடங்களில் டாக்சி ஓட்டுநர்கள் அதிகமாக இருப்பர் என்பதால்,  அவர்களால் அதைத் தடுப்பதில் அதிகப் பங்காற்ற முடியும் என்று Grab கருதுவதாக அதன் உயர் அதிகாரி தெரிவித்தார்.

Grab சேவை தற்போது 8 நாடுகளில் நடப்பிலுள்ளது. 

Grab நிறுவனம் ஆள் கடத்தலுக்கு எதிரான Liberty Shared அமைப்புடன் இணைந்து கம்போடியாவிலும், பிலிப்பீன்ஸிலும் பயிற்சியைத் தொடங்குகிறது.

Grab நிறுவனத்தில், கிட்டத்தட்ட 9 மில்லியன் ஓட்டுநர்கள் பணியாற்றுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்