Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இரண்டாம் கட்ட நோய்ப்பரவல் - சமாளிக்கத் திணறும் ஆசியா

ஆசியாவின் பல இடங்களில் COVID-19 நோய்ப் பரவல் மீண்டும் தலையெடுத்துள்ளது. அதனை எதிர்கொள்ளும் நாடுகளின் அண்மைய நிலவரம்....

வாசிப்புநேரம் -
இரண்டாம் கட்ட நோய்ப்பரவல் - சமாளிக்கத் திணறும் ஆசியா

(கோப்புப் படம்: Reuters)

ஆசியாவின் பல இடங்களில் COVID-19 நோய்ப் பரவல் மீண்டும் தலையெடுத்துள்ளது. அதனை எதிர்கொள்ளும் நாடுகளின் அண்மைய நிலவரம்....

வியட்நாம்

  • வியட்நாமில் புதிதாக 9 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் அண்மையில் கிருமிப்பரவல் தொடங்கிய டானாங் (Danang) நகருடன் தொடர்புடையவர். எஞ்சிய 8 பேரும் தலைநகர் Hanoi யிலேயே பாதிப்புக்கு ஆளானவர்கள்.
  • தற்போது அங்கு 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்கு 81,000க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜப்பான்

  • ஜப்பானில் நேற்று முதன்முறை, 1,113 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது. தற்போது அங்கு 33,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,000க்கும் அதிகமானோர் மாண்டனர்.
  • தலைநகர் தோக்கியோ கிருமிப்பரவல் மையமாக நீடிக்கிறது. ஒசாக்கா வட்டாரத்திலும் இதுவரை இல்லாத வகையில் சுமார் 220 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனா

  • சீனாவில், கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு, ஆக அதிகமாக 105 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • அவர்களில் மூவர் மட்டுமே வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்.
  • புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் வடமேற்கு வட்டாரமான சின்சியாங்கைச் (Xinjiang) சேர்ந்தவர்கள். எஞ்சியோர் வடகிழக்கு லியாவ்நிங் (Liaoning) மாநிலம், தலைநகர் பெய்ச்சிங் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்.

ஹாங்காங்

  • ஹாங்காங்கில் மீண்டும் பெரிய அளவில் கிருமித்தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகத் தலைமை நிர்வாகி கேரி லாம் எச்சரித்துள்ளார். ஹாங்காங்கில் நேற்று 118 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
  • பாதுகாப்பான இடைவெளி தொடர்பான விதிகளை அரசாங்கம் கடுமையாக்கியுள்ளது.
  • செப்டம்பரில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த, சட்டமன்றத் தேர்தல் தள்ளிவைக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.

இந்தோனேசியா

  • இந்தோனேசியாவில் புதிதாக 2,300க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இரண்டாவது முறை, அங்கு 2,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று வாரங்களுக்கு முன்னர் முதன்முறை அத்தயை நிலை ஏற்பட்டது.
  • புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 570க்கும் அதிகமானோர் தலைநகர் ஜக்கர்த்தாவைச் சேர்ந்தவர்கள்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்