Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இவ்வாண்டின் Asian Academy Creative Awardsஇல் இரு விருதுகளை வென்றுள்ள CNA

Channel Newsasia , Asian Academy Creative Awards எனும் விருது நிகழ்ச்சியில் 2 விருதுகளை வென்றுள்ளது. 

வாசிப்புநேரம் -

Channel Newsasia , Asian Academy Creative Awards எனும் விருது நிகழ்ச்சியில் 2 விருதுகளை வென்றுள்ளது.

-- Climate Change: A Wicked Problem
எனும் நான்கு பாகங்களைக்கொண்ட தொடர் சிறந்த தகவல்-பொழுதுபோக்குத் தொடர் அங்கத்தில் வெற்றிபெற்றது. சிங்கப்பூர் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளைப் பற்றிய அந்தத் தொடரை டாக்டர் ஜனில் புதுச்சேரி வழிநடத்தினார்.

-- Talking Point நிகழ்ச்சிக்காக ஸ்டீவன் சியா (Steven Chia)

சிறந்த செய்தி அல்லது நடப்புவிவகார நிகழ்ச்சிப் படைப்பாளர் விருதை வென்றார்.

சிங்கப்பூர் ஊடக விழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக அந்த விருது வழங்கும் நிகழ்ச்சி அமைகிறது.

அதில் ஆஸ்திரேலியா, கம்போடியா, சீனா, ஹாங்காங், இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, மியன்மார், நியூஸிலந்து, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தென்கொரியா, தைவான், தாய்லந்து, வியட்நாம் ஆகிய நாடுகளின் படைப்புகள் சிறப்பிக்கப்படுகின்றன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்